இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ரொஹான் ஜோஷப் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ரொஹான் ஜோஷப் இன்று (2020 பிபருவரி 24) பொறுப்பேற்றார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் துஷார உடுகமவினால் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக கொடி அதிகாரி கொடி கட்டளை ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.