அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் வைத்திருந்த இரு நபர்கள் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மன்னார், தாரபுரம் மற்றும் தலைமன்னார், ஊருமலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர், மன்னார் பொலிஸ் சிறப்பு பணிக்குழு மற்றும் தலைமன்னார் மீன்வள உதவி இயக்குநரின் அலுவலகமுடன் இனைந்து மன்னார், தாராபுரம் மற்றும் தலைமன்னார் ஊருமலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக 1550 சங்குகள் மற்றும் 284 சங்குகள் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் அப்பகுதியில் வசிக்கும் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மன்னார் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.