மன்னார் நச்சிகுடா கடற்கரை பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 31 வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

2020 பிப்ரவரி 25 ஆம் திகதி மன்னார் நச்சிகுடா இருந்து குமுலமுனை கடற்கரை வரையிலான பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டிங்கி படகுகளில் மறைக்கப்பட்டுள்ள 31 தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை கைப்பற்றியது.

இலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடல்களின் மீன்வளம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடற்படையினர் மன்னார் நச்சிகுடா இருந்து குமுலமுனை கடற்கரை வரையிலான பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது கடற்கரையில் நிறுத்தியுள்ள டிங்கி படகுகளில் மறைக்கப்பட்டுள்ள 31 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை கைது செய்யப்பட்டன.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளை மேலதிக விசாரணைகளுக்காக கிலினோச்சி மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.