சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒரு நபர் கைது

கடற்படை, கொழும்பு கலால் சிறப்பு செயல்பாட்டு பணியகம் மற்றும் புகையிலை மற்றும் மதுபான தேசிய ஆணையம் ஆகியவை இனைந்து 2020 பிப்ரவரி 25, ஆம் திகதி இரத்மலான பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடற்படை, கொழும்பு கலால் சிறப்பு செயல்பாட்டு பணியகம் மற்றும் புகையிலை மற்றும் மதுபான தேசிய ஆணையம் ஆகியவை இனைந்து இரத்மலான பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 3600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் இரத்மலான பகுதியில் வசிக்கும் 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் \ தொடர்பாக கொழும்பு கலால் துறையின் சிறப்பு செயல்பாட்டு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. .