துருக்கி தூதர் ஆர். டிமெட் செகசியோக்லு (R. Demet Sekercioglu) கடற்படை தலைமையகத்திற்கு வருகை

துருக்கி தூதர் திருமதி ஆர். டிமெட் செகசியோக்லு (R. Demet Sekercioglu) இன்று (2020 பிப்ரவரி 26) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அதன் படி வருகை தந்த துருக்கி தூதர் ஆர். டிமெட் செகசியோக்லுவை அன்புடன் கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டது. இங்கு இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் துருக்கி தூதர் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் இந் நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் இடம்பெற்றது.