இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாக நிருவனத்தின் யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் மேற்கொள்கின்ற யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு இன்று (2020 பிப்ரவரி 26) அடிக்கல் நாட்டப்பட்டது.

கடற்படையில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் நலனுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் மேற்கொள்கின்ற சேவா வனிதா யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடத்திற்கு தென் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் ஜயசூரிய தலைமயில் இன்று (2020 பிப்ரவரி 26) அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வுக்காக தென் கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி உட்பட கட்டளையின் அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய மாலுமிகள் பங்கேற்றனர்.