முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்து கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்த கண்ணிவெடி யொன்று கடற்படையால் இன்று (2020 பிப்ரவரி 27) கண்டுபிடிக்கப்பட்டன.

இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையிர் இன்று (2020 பிப்ரவரி 27) முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்று தொடங்கியது. அப்போது இந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது. இது எல்.டீ.டீ.ஈ பயங்கரவாதிகள் தயாரித்த குண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன.