வருடாந்திர கடல் நீச்சல் போட்டித்தொடர் கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை நீர் விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்த 83 வது கடல் நீச்சல் போட்டித்தொடர் 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் கல்கிசை கடற்கரையில் நடைபெற்றதுடன் பரிசு வழங்கும் விழாவின் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

இரண்டு மைல் தூர நிகழ்வான இப் போட்டித்தொடருக்கு பாடசாலை விளையாட்டு அணிகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள் மேலும் இலங்கை கடற்படையின் உயிர் காப்பு கடற்படையினர் (4RU ), மீட்பு படகுகள் மற்றும் மருத்துவ கடற்படையினர் அப் பகுதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வில் பங்கேற்ற கடற்படை வீரர் ஜி.எஸ்.என் பெரேரா, திறந்த பிரிவில் இரண்டாம் இடத்தை வெற்றிப் பெற்றார், அதே நேரத்தில் கடற்படைத் தளபதி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இலங்கையின் நீர் விளையாட்டு சங்கத்தின் செயற்குழுவால் கடற்படைத் தளபதிக்கு நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.