அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் 2020 வெற்றிகரமாக நிறைவு

இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அங்கு கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இப் படகோட்டப் போட்டித் தொடருக்காக கடற்படை பாய்மரக் பிரிவின் கடற்படையினர் உட்பட RCYC விளையாட்டு கழகம், கொழும்பு ராயல் கல்லூரி விளையாட்டு கழகம், கல்கிசை செயின்ட் தாமஸ் கல்லூரி விளையாட்டு கழகம், CMYC விளையாட்டு கழகம் மற்றும் கொழும்பு மகளிர் கல்லூரி விளையாட்டு கழகம் ஆகிய நாட்டின் புகழ்பெற்ற படகோட்டிக் கழகங்களைச் சேர்ந்த எண்பத்து ஏழு (87) விளையாட்டு வீர வீராங்கனிகள் 70 படகுகளுடன் பங்கேற்றனர். இங்கு Jet ski மற்றும் Dragon படகுகளைப் பயன்படுத்தி கண்காட்சி போட்டியும் நடைபெற்றது.

காலி முகத்திடம் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போட்டித்தொடரில் பரிசு வழங்கும் விழாவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வில் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ அவர்களின் மனைவி, கடற்படை தலைமை பணியாளர், பணிப்பாளர் நாயகம் சேவைகள், இயக்குநர் விளையாட்டு, சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், கடற்படை விளையாட்டு வீரர்கள் லேசர் ஸ்டாண்டர்ட் பிரிவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களும், ஜிபி 14 பிரிவில் முதல் இடமும், லேசர் ரேடியல் பிரிவில் இரண்டாவது இடமும், எண்டர்பிரைஸ் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களும் வெற்றி பெற்றனர் . வெற்றியாளர்களுக்கு கடற்படைத் தளபதி மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ அவர்களின் மனைவியால் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டன.