போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்ய கடற்படை உதவி

திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் 2020 மார்ச் 01 ஆம் திகதி கடற்படை மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

இலங்கையில் போதைப்பொருள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதையும், வைத்திருப்பதையும் தடுப்பதில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மற்றொரு நடவடிக்கை கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் இணைந்து மேற்கொண்டுள்ளது. அதன் படி பாதையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று சோதித்த போது 40 கிராம் கேரள கஞ்சா மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன் பின் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

குறித்த சந்தேக நபர் 34 வயதான அப் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.