வெடிபொருட்களுடன் மூன்று நபர்கள் (03) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து 2020 மார்ச் 01 ஆம் திகதி கின்னியா, குரையாடி பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களை கொண்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகள் மூலம் கடல் சூழலுக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் கின்னியா பொலிஸார் இனைந்து 2020 மார்ச் 01 ஆம் திகதி கின்னியா, குரையாடி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மூன்று (03) நபர்கள் பயணிக்கின்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று கவனிக்கப்பட்டது. குறித்த நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மேலும் ஆய்வு செய்ததில், 30 வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 45 மின்சார அல்லாத டெட்டனேட்டர்கள் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23,37 மற்றும் 44 வயதுடைய அதே பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணையின் பின் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வெடிபொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.