இரத்த தான வேலைத்திட்டமொன்றுக்காக கடற்படை பங்களிப்பு

மன்னார் மருத்துவமனையில் இடம்பெற்ற இரத்த தான வேலைத்திட்டமொன்றுக்காக 2020 மார்ச் 01 ஆம் திகதி இலங்கை கடற்படை சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக தனது பங்களிப்பை வழங்கியது.

அதன்படி, மன்னார் மருத்துவமனையில் இரத்த வங்கியின் தலைமை மருத்துவ அதிகாரி விடுத்த வேண்டுகோளின் படி வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட ஏராளமான கடற்படை வீரர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.