சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடற்படை உதவியால் கைது

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை கடலுக்கு அனுப்பியுள்ளது. குறித்த நடவடிக்கைகாக ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சயுரல, ஒரு மாத காலம் கடலில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அப்போது இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் ஹெராயின் என்று சந்தேகப்படுகின்ற சுமார் 75 கிலோகிராம் போதைப்பொருட்களும் ஐஸ் என்று சந்தேகப்படுகின்ற சுமார் 66 கிலோகிராம் போதைப்பொருட்களும் கடத்தி சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மற்றும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணையில் போது இவ்வாரு இலங்கையில் இருந்து பல நாள் மீன் பிடி நடவடிக்கைளில் ஈடுபடுவது போல் சென்ற மீன்பிடி படகுகளுக்கு போதைப்பொருள் வழங்க ஆழ் கடலில் இருந்த கொடி சொந்த நாடு (Flag State) இல்லாத படகொன்று முதலில் கைது செய்யப்பட்டன. இந்த மீன்பிடிக் படகு சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு பெறப்பட்ட ரகசிய தகவல்களின் படி நாங்கு நாட்களாக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் அதேபோல், ஆழ்கடலில் இருந்த மேலும் ஒரு கொடி சொந்த நாடு (Flag State) இல்லாத படகொன்று கைது செய்யப்பட்டது. அங்கு மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குறித்த படகில் இருந்து ஹெராயின் என்று சந்தேகப்படுகின்ற 329 பாக்கெட்களும் ஐஸ் என்று சந்தேகப்படுகின்ற 50 பாக்கெட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த நடவடிக்கை இலங்கையில் இருந்து 600 கடல் மைல் (1111 கி.மீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதுக்காக சுமார் 30 நாட்கள் கடந்தது. அதன்படி, மேற்கொண்டுள்ள முழு நடவடிக்கையின்போது, 397 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 100 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் ஐஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடலில் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அதிக அளவு இதுவாகும். மேலே கைப்பற்றப்பட்ட பொதிகள் போதைப்பொருள் என்று நிரூபிக்கப்பட்டால், அவை மதிப்பு ரூ .600 பில்லியனாகும்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவியுடன் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஆழ்கடலில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நிறுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. போதைப்பொருள் வலையமைப்பு செயற்கைக்கோள் தொலைபேசிகளால் அறிவுறுத்தப்பட்டதுடன் இலங்கை கடற்படை தொழில்நுட்ப உத்திகளை விதித்து இலங்கையின் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் டிங்கி படகுகள் உட்பட போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்தது. போதைப்பொருள் விநியோக வலையமைப்பை வெளிநாட்டிலிருந்து செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்புகளால் இயக்கப்படுகின்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கரைக்குகொண்டு வருகின்ற போதைப்பொருளைப் பெறுவதற்காக மாதர திக்வெல்லவில் உள்ள குடாவெல்ல கடற்கரைக்கு வந்த நபர்களை போலீஸ் போதைப்பொருள் பிரிவு கைது செய்தது.

இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றதுடன் பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்களை துறைமுகத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்த பின்னர் மேலதிக விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டும். இலங்கை கடற்படையால் 2019 ஆம் ஆண்டில் 762.253 கிலோ கிராம் ஹெராயின், 3653.427 கிலோ கிராம் கேரள கஞ்சா, 3.010 கிலோ கிராம் ஐஸ் கைது செய்யப்ட்டுள்ளதுடன் இலங்கையை போதைப்பொருள் இல்லாத தீவாக மாற்றுவதில் கடற்படை எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது.