வடக்கு கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 281 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 2,) யாழ்ப்பாணம் நாகர்கோயில், கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது கடலில் மிதந்த சுமார் 281 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இன்று (2020 மார்ச் 02) யாழ்ப்பாணம் நாகர்கோவில், கடலில் மேற்கொண்டுள்ள ரோந்துப்பணியின் போது, கடலில் மிதக்கும் சில பார்சல்கள் மீட்கப்பட்டன. இந்த பார்சல்களை மேலும் சோதனை செய்த போது சுமார் 281 கிலோ கிராம் கேரள கஞ்சா இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, கேரள கஞ்சாவை கடல் வழிகள் மூலம் நாட்டிற்கு கடத்த மோசடி செய்பவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன, மேலும் கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் இந்த கேரள கஞ்சா பொதிகள் கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.