11 வது பாதுகாப்பு சேவை விளையாட்டு விழாவின் படகுப்போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவு

11 வது பாதுகாப்பு சேவை விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நடத்திய படகுப்போட்டித்தொடர் (Rowing Championship) இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் குறித்த போட்டித்தொடர் 2020 பிப்ரவரி 28 முதல் மார்ச் 02 வரை தியவண்ணா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) நடைபெற்றது. /p>

இந்த தேசிய படகுப்போட்டித்தொடருக்காக முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இங்கு இரண்டு தங்கப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய பங்கேற்பாளர்களால் வென்றன.

இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கழந்துகொண்ட கடற்படைப் பணியாளர்களின் துணைத் தலைவரும், வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் கபில சமரவீர, போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் இந் நிகழ்வில் இராணுவம் மற்றும் விமானப்படைகளின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளும் பங்கேற்றனர்.