கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை ஆதரவு

கடற்படையின் கரையோர தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மற்றொரு திட்டம் இன்று (2020 மார்ச் 03) பானாம களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக கட்டளையின் கடற்படையினர் கழந்துகொண்டனர். இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட பானம களப்பு பகுதியில் இருந்து பீனட் பாம் வரை கடலோரப் பகுதியில் சுமார் 3 கி.மீ துரம் இவ்வாரு கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.