சட்ட விரோதமாக கடல் அட்டைளை பிடித்த 06 நபர்கள் கடற்படையினரினால் கைது

2020 மார்ச் 04 ஆம் திகதி இரனைத்தீவு, கடல் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 06 நபர்களை கடற்படை கைது செய்தது.

கடற்படை, பிராந்திய நீரின் மீன்வள வளங்களை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விரிவாக்கமாக, இன்று (2020 மார்ச் 04) ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இரனைத்தீவு கடல் பகுதியில் இதேபோன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 06 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 254 கடல் அட்டைகள் 02 டிங்கி படகுகள் 16 ஆக்ஸிஜன் டாங்கிகள் மற்றும் பல சுழியோடி உபகரணங்கள் ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னார் பகுதியில் வசிக்கின்ற, 25 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் என கூறப்படுகிறது. கடற்படையால் கைது செய்யப்பட்ட நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள், ஆக்ஸிஜன் டாங்கிகள் மற்றும் பல சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிலினோச்சி உதவி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.