கடற்படை ஆழ்கடலில் வெற்றிகரமாக கைப்பற்றிய ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகுகளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை பயன்படுத்தி இலங்கையில் இருந்து சுமார் 600 கடல் மைல் (1111 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய 600 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் படகுகள் இன்று (2020 மார்ச் 05) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் பணியகம் பெற்ற உளவுத்துறை தகவலின் படி, இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சயுரல ஆகியவற்றை ஒரு மாத கால நடவடிக்கைக்கு அனுப்பியதுடன் அப்போது இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் ஹெராயின் என்று சந்தேகப்படுகின்ற சுமார் 75 கிலோகிராம் போதைப்பொருட்களும் ஐஸ் என்று சந்தேகப்படுகின்ற சுமார் 66 கிலோகிராம் போதைப்பொருட்களும் கடத்தி சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மற்றும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..

மேலதிக விசாரணையில், பல நாள் மீன்பிடித்தல் என்ற போர்வையில் பயணம் செய்த மீனவர்களுக்கு போதைப்பொருள் வழங்கியதற்காக ஆழ் கடலில் இருந்த கொடி சொந்த நாடு (Flag State) இல்லாத படகொன்று முதலில் கைது செய்யப்பட்டது. இந்த மீன்பிடிக் படகு சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு பெறப்பட்ட ரகசிய தகவல்களின் படி நாங்கு நாட்களாக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் அதேபோல், ஆழ்கடலில் இருந்த மேலும் ஒரு கொடி சொந்த நாடு (Flag State) இல்லாத படகொன்று கைது செய்யப்பட்டது. அங்கு மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குறித்த படகில் இருந்து ஹெராயின் என்று சந்தேகப்படுகின்ற 329 பாக்கெட்களும் ஐஸ் என்று சந்தேகப்படுகின்ற 50 பாக்கெட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, மேற்கொண்டுள்ள முழு நடவடிக்கையின் போது, 397 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 100 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் ஐஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடலில் ஒரு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள் இதுவாகும் அதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள். சந்தேக நபர்கள் படகுகள் இன்று (2020 மார்ச் 5) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உட்பட போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட 21 சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் மேற்கொள்ளப்படும்.