சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த ஒருவர் கடற்படையினரால் கைது

மார்ச் 4 அன்று, யாழ்ப்பாணத்தின் கல்முனை கடலில் மேற்கொள்ளப்ட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த ஒருவரை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.ச

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை தீவின் நீரில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கல்முனை புள்ளியின் தென்கிழக்கில் கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை நடத்திய இதேபோன்ற நடவடிக்கையின் போது, கடற்படை சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த்தற்காக இந்த சந்தேக நபரை காவலில் எடுத்து விசாரித்தது.சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் 930 ஐயும் ஒரு டிங்கி மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களும் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் 25 வயதான யாழ்ப்பாணத்தின் பூனகரி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடல் அட்டைள், டிங்கி மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களும் வேலனையின் மீன்வள ஆய்வாளரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.