இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டிதொடர்- 2020

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டிதொடர்- 2020 மார்ச் 01 ஆம் திகதி முதல் 07 திகதி வரை வட மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டித்தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி 07 அணிகள் பங்கேற்றன. இங்கு கடற்படை கொடி கட்டளைக்கும் கடற்படை பயிற்சி கட்டளைக்கும் இடையிலான (ஆண்கள்) இறுதிப் போட்டியில் கடற்படை பயிற்சி கட்டளை அணி வெற்றி பெற்றதுடன் வட மத்திய கடற்படை கட்டளைக்கும் மேற்கு கடற்படை கட்டளைக்கும் இடையிலான (பெண்கள்) இறுதிப் போட்டியில் வட மத்திய அணி வெற்றி பெற்றது.

மேலும், கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டிதொடரில் நிறைவு விழா மற்றும் பரிசு வழங்கல் 2020 மார்ச் 07 ஆம் திகதி வட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக வட மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி உட்பட கடற்படை சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் ஏராளமான மாலுமிகள் பங்கேற்றனர்.