சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது

காலி கடலில் 2020 மார்ச் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது செய்யப்பட்டது.

இலங்கை கடல் மண்டலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து இலங்கை கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன்படி, 2020 மார்ச் 6 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் காலி கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியில் சந்தேகத்திற்கிடமான படகொன்று ஆய்வு செய்தது. அங்கு தேயிலை தூளை பொதி செய்ய பயன்படுத்தப்படும் ஒரு பாலிதீன் பையை மீட்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, கடற்படை நாய் பிரிவின் போதைப்பொருள் மோசடியில் பயிற்சி பெற்ற நாயொன்று பயன்படுத்தப்பட்டது, மேலும் குறித்த நாய் அந்த பையை கண்டுபிடித்தது.

போதைப்பொருள் கொண்டு செல்ல குறித்த பையை பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணைகளுக்காக படகு மற்றும் அதன் பயணிகள் எல்பிட்டிய பொலிஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டனர்.