தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நீல பசுமை திட்டத்தின் கீழ் பல நிகழ்வுகள்

நீல பசுமைத் திட்டத்தின் கிழ் மேற்கொள்ளப்படுகின்ற பல நிகழ்வுகளின் மற்றொரு திட்டம் தெற்கு கடற்படை கட்டளையின் காலி, திக்வெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகள் மையமாகக் கொண்டு 2020 மார்ச் 07 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், 'நீல பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின் ' பல திட்டங்கள் 2020 மார்ச் 07 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப்ப போல் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.. அங்கு, இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் இருந்து காலிக்கு செல்கின்ற காலி மாதார பிரதான சாலையின் இருபுறம் சுத்தம் செய்யப்பட்டதுடன் திக்வெல்ல கடலோரப் பகுதி மற்றும் அதனுடன் இணைந்த ஹம்பாந்தோட்டை மற்றும் இந்திவின்ன ஆகிய கடற்கரைகளும் சுத்தம் செய்யப்பட்டன. இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் தூய்மையடைந்த இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் உள்ளிட்ட ஏராளமான குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளுக்காக தெற்கு கடற்படை கட்டளையின் ஏராளமான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பங்கேற்றனர், மேலும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகள் இல்லாத ஒரு மண்டலம் உருவாக்க நீல-பச்சை சுற்றுச்சூழல் போரின் கீழ் கடற்படை தொடர்ந்து பணியாற்றி வருகிறது.