முருங்கன் பண்டைய விஹாரயவில் இரவு முழுவதும் நடந்த பிரித் ஆசீர்வாதத்திற்கு கடற்படையின் ஆதரவு

இலங்கை மற்றும் உலக மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி மஹா சங்கத்தினர் தலைமையில் 2020 மார்ச் 7 ஆம் திகதி முருங்கன் பண்டைய விஹாராயத்தில் இரவு முழுவதும் பிரித் வளிபாடுகள் நடைபெற்றது

குறித்த பிரித் ஆசீர்வாதத்திற்காக மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் தமிழ் மதகுருமார்களும் கழந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வின் வெற்றிக்காக வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் லலித் திசானநாயக்க உட்பட கட்டளையின் கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினார்கள். இதை விஹாரையின் தலைமை பதவியில் இருந்த புநித வல்பொல சரண நாயக தேரர் பாராட்டினார்.

மேலும், கடற்படை, இராணுவம் மற்றும் காவல்துறையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.