ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை இடையில் நட்பு கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது

நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் பராமட்டா (HMAS Parramatta) கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இடையில் இன்று (2020 மார்ச் 09) நட்பு கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது.

அதன்படி, வெலிசறை கடற்படை முகாமில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றன. போட்டியின் முடிவில், இரு நாடுகளின் வீரர்களும் குழு புகைப்படத்திற்கும் கலந்து கொண்டனர்.