கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது

2020 மார்ச் 08 ஆம் திகதி கொட்டாஞ்சேனை நகரப் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து கொட்டாஞ்சேனை (ஜம்பட்டா வீதி) நகரப் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத கிளைபோசேட் கொண்ட 600 இரசாயன பொருள் பாக்கெட்டுகளை (60 கிலோ கிராம்) மீட்டுள்ளனர். இந்த இரசாயன பொருள் பாக்கெட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையில், சந்தேக நபரின் வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த அடையாளம் தெரியாத 270 களை பாக்கெட்டுகளும் (132 கிலோ மற்றும் 300 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டன.p>

கைது செய்யப்பட்ட நபர்கள் களனிய பகுதியில் வசிக்கின்ற 55 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.