இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு பாடத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு பாடத்திட்டம் 2020 மார்ச் 09 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலில் கிழ் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பயிற்சிக்காக ஐந்து இந்தோனேசிய கடல்சார்பொலிஸ் அதிகாரிகள், 08 மலேசிய கடற்படை உறுப்பினர்கள் மற்றும் 13 இலங்கை கடற்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் இந்த பாடநெறி இரண்டு வாரங்களாக இடம்பெறும்.

இந்த பாடநெறி முக்கியமாக கப்பல்களுக்கான அணுகல் பற்றிய அறிவு, அவற்றின் கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் உத்திகள், கடல்சார் சட்ட அமலாக்க நடவடிக்கைகள், போதைப்பொருள் கண்டறிதல், உலகில் போதைப்பொருள் கடத்தலை அடையாளம் காணுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும்.