வெற்றிகரமான கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு "பரமட்டா" கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறுகிறது

ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் பரமட்டா (HMAS Parramatta) கப்பல் இலங்கை கடற்படையுடன் வெற்றிகரமாக கடற்படை பயிற்சியைத் தொடர்ந்து 2020 மார்ச் 11 அன்று தீவில் இருந்து புறப்பட்டது.

2020 மார்ச் 7 ஆம் திகதி 5 நாள் நட்பு பயணத்திற்காக இலங்கைக்கு வந்த ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் பரமட்டா (HMAS Parramatta) கப்பல் இலங்கை கடற்படைக் கப்பல்களான 'சிந்துரல' மற்றும் 'நந்திமித்ர' ஆகியவற்றுடன் கொழும்புக்கு கடல் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றது. இந்த பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அறிவையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது.

தீவில் தங்கியிருந்த காலத்தில், இந்த கப்பல் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி, ஐந்து நாள் வெற்றிகரமான பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை கடற்படையின் வழக்கமான பிரியாவிடைக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தை விட்டு இக் கப்பல் வெளியேறியது.