கேரள கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்ய கடற்படை உதவி

2020 மார்ச் 11 ஆம் திகதி திலாடியாகமவின் பொதுப் பகுதியில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, 10 கிராம் கஞ்சா வைத்திருந்த ஒருவரை கடற்படை கைது செய்தது.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவாக இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நடவடிக்கைகளின் விரிவாக்கமாக, புத்தலம் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு திலாடியாகமவின் பொது பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீட்டை தேடியது. அந்த வீட்டில் 10 கிராம் கஞ்சா வைத்திருந்த ஒரு சந்தேக நபர் இதன் போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் புத்தலத்தில் உள்ள ரத்மல்கஹயாயவில் வசிக்கும் 46 வயதுடையவர் என அடையாலம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து புத்தலம் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.