செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் சங்குகளை வைத்திருந்த நபர் கைது

செல்லுபடியாகும் அனுமதியின்றி சங்குகளை வைத்திருந்த நபரை 13 ஆம் திகதி அன்று கடற்படை கைது செய்தது.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மன்னார் மீன்வள ஆய்வாளருடன் வடமத்திய கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் குழு இந்த தேடலை தலைமன்னாரில் உள்ள உருமலையில் மேற்கொண்டது. தேடலின் போது,ஒரு மீன்பிடி குடிசையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 420 சங்குகளை மீட்டெடுக்க முடிந்தது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் தலைமன்னாரில் வசிக்ப்பர் என அடையாளம் காணப்பட்டார்.

மன்னார் மீன்வள உதவி இயக்குநரகம் சந்தேக நபர் மற்றும் சங்குகள் தொடர்பாக மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.