கடற்படை மற்றும் பொலிஸ் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது ஹெராயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டார்

திருகோணமலையில் இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயினுடன் ஒருவர் 2020 மார்ச் 15 அன்று கைது செய்யப்பட்டார்.

தற்போது போதைப் பொருள்களை எதிர்த்துப் போராடுவதற்கான தேசியப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை, கடலிலும் நிலத்திலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பல வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கையின் போது, திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளுடன் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், சந்தேகத்திற்கிடமான நபரைக் கண்டுபிடித்து, அவரிடம் 660 மி.கி ஹெராயின் இருப்பதைக் கண்டுபிடித்தனர். சந்தேக நபர் ஹெராயினை விற்க தயாராகி கொண்டிருந்தபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் 41 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஹெராயின் உடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொலீசில் ஒப்படைக்கப்பட்டார்.