கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த நபர் கைது

யாழ்ப்பாணத்தின் வினயசோடி கடல் பகுதியில் இன்று மார்ச் 16, 2020 அன்று நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த ஒருவரை கைது கடற்படை செய்தது.

சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து இலங்கை கடற்படை தொடர்ந்து இலங்கையின் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.அதன்படி, யாழ்ப்பாணத்தின் வினயசோடி கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையிப் போது, வடக்கு கடற்படைத் தளத்துடன் இணைந்த கடற்படை வீரர்கள் இந்த நபரை சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்ததற்காக கைது செய்தனர். சந்தேகத்திற்கு இடமின்றி 175 சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைகள், 01 டிங்கி மற்றும் பல மீன்பிடி சாதனங்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர் யாழ்ப்பாணத்தின் பல்லிக்குடாவில் வசிக்கும் 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைகள் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களுடன் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.