பூஸ்ஸ கடற்படை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டது

COVID-19 வைரஸ் உலகம் முழுவதும் தொற்றுநோயாக மாறியுள்ள பின்னணியில், இலங்கை கடற்படை தேசியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 2020 மார்ச் 16 ஆம் திகதி பூஸ்ஸ கடற்படை வளாகத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விரைவாக அமைத்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை அதிகரிப்பதற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நான்கு மாடி கட்டிடம் தனிமைப்படுத்தலுக்குத் தயாரிக்கப்பட்டது. இத்தகைய வசதிகள் தேவைப்படும் 136 பேரை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்க முடியும்.

தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வருபவர்களுக்கு சுகாதார பொருட்கள், வைஃபை, தொலைக்காட்சி, ,சலவை போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. கடற்படை பொது சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வருபவர்களுக்கு சத்தான உணவு சமைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.