கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை பின்பற்றாத 20 நபர்கள் கடற்படையினரால் கைது

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு இணங்க, 2020 மார்ச் 19, அன்று மதியம் 2.30 மணி முதல் புத்தலம் மற்றும் கொச்சிகடை, நீர் கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும், 20 பேர் இதை மீறுவது கண்டறியப்பட்டது, அதன்படி அவர்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த பேரழிவுகரமான சூழ்நிலையில் ஒரு குடிமகனாக தங்கள் பொறுப்புகளை புறக்கணித்து, நாட்டில் உள்ள பிற மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்கள் மீது அரசாங்கம் கண்டிப்பாக சட்டத்தை அமல்படுத்துகிறது. பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், புத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி கடல் வழியாக தப்பி ஓடிய ஒரு குழுவைப் பற்றிய தகவல் கிடைத்ததும், 2020 மார்ச் 19 அன்று கடற்படை ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, படகுகள் மூலம் மன்னாருக்கு புறப்படத் தயாரான பின்வரும் நபர்கள் பத்தலங்குண்டுவ பகுதியில் ழைவத்து கடற்படை கைது செய்துள்ளது.

1. டபிள்யூ.எஸ். பெர்னாண்டோ, சிலாபம் (34 வயது)

2. டபிள்யூ.எம்.எஸ்.என் பெர்னாண்டோ - சிலாபம் (32 வயது)

3. . டபிள்யூ.என் பெர்னாண்டோ - சிலாபம் (25 வயது)

4. ஐ.பி நவாஸ், சிலாபம் (24 வயது)

5. எஸ்.எஸ்.ஜெயவர்தன - சிலாபம் (63 வயது)

6. ஏ.எஸ். பெர்னாண்டோ, கற்பிட்டி (28 வயது)

7. டபிள்யூ.சி.டி பெர்னாண்டோ - கற்பிட்டி (22 வயது)

8. எம்.பி.எம் ருக்ஷனா - கற்பிட்டி (18 வயது)

9. எம்.பி.எம்.வி அல்மேதா - கற்பிட்டி (16 வயது)

10. . எம்.பி.எம்.எம் லெசிந்த - கற்பிட்டி (20 வயது)

11. ஏகே பெர்னாண்டோ – கற்பிட்டி (21 வயது)

12. என் பெர்னாண்டோ - கற்பிட்டி (43 வயது)

13. எம்.பி அல்மேதா - கற்பிட்டி (42 வயது)

14. நிம்லட் ஷியாமலி குரூஸ் - சிலாபம் (46 வயது)

15. சுதாரி விஸ்னிகா தபரேரா - சிலாபம் (22 வயது)

16. எஸ் மரிய பிரசாந்தி குரூஸ், சிலாபம் (26 வயது)

17. கிறிஸ்டின் ஜூட் செல்வராஜ் குரூஸ் - சிலாபம் (52 வயது)

18. டபிள்யூ அமீஷா ஹர்ஷனி - சிலாபம் (09 வயது)

19. டபிள்யூ ரெஜியா ஷெவானி - சிலாபம் (04 வயது)

20. டபிள்யூ.சனுடி ஷெஹாரா - சிலாபம் (06 மாதங்கள்)

அவர்களில் 03 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் இருந்தனர். இந்த நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புதிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மற்றும் அரசாங்கத்தின் கூட்டு பொறிமுறையை வலுப்படுத்த கடற்படை ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்த முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்காமல் பொதுமக்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள கடற்படை, மக்களின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மேலும், ஊடகங்களிலும் மற்ற எல்லா விஷயங்களிலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்படுவோரை நீதிக்கு கொண்டு வர கடற்படை தயாராக உள்ளது.