இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்திலும் கடற்படை கிருமி நீக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் ஒரு கிருமி நீக்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பிற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிருமி நீக்கம் செய்யுமாறு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் இலங்கை ஒலிபரப்புக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதில் பிரிவு (Chemical, Biological, Radiological and Nuclear) இன்று (2020 மார்ச் 21) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் கிருமி கட்டுப்பாட்டு திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது. எதிர்காலத்திலும் இதேபோன்ற திட்டங்களை மேற்கொள்ள கடற்படை தயாராக உள்ளது.