தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடற்படைக்கு உபகரணங்கள் வழங்கும்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்தப்பட தேவையான ஏராளமான உபகரணங்களை, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகளினால் இன்று (2020 மார்ச் 21) திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு உதவுவதற்காக கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதற்கு நிதி மற்றும் பொருள் அரசு மற்றும் தனியார் துறையினரால் ஆதரிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகள் குழு அதன் தலைவர் திரு. கமல் ரத்வத்தேவின் உத்தரவின் பேரில், 139 இரும்பு படுக்கைகள், 200 மெத்தைகள், 100 பிளாஸ்டிக் நாற்காலிகள், இரண்டு அறை நாற்காலிகள் மற்றும் 59 கொசு வலைகள் ஆகியவற்றை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்த கடற்படைக்கு வழங்கப்பட்டன.

இந்த நன்கொடை கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி கமடோர் சஞ்சீவ டயஸால் பெறப்பட்டது, மேலும் சாம்பூர் பகுதியில் விரைவில் திறக்கப்படவுள்ள, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு உடனடியாக இந்த உபகரணங்கள் அனுப்பப்பட்டன.