கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது

இன்று (மார்ச் 23, 2020) திருகோணமலை, சீனன்வேலி பகுதியில் கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தின் கடல் வளங்களை பாதுகாக்க நிலையான நடவடிக்கைகள் கடற்படை மேற்கொள்கின்றன. அதன் படி திருகோணமலை சின்னவேலி கடலோரப் பகுதியில் இன்று (மார்ச் 23, 2020) கிழக்கு கடற்படை கட்டளை நடத்திய தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யபட்டதுடன் 11 கிலொ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் 150 கடலாமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, மூன்று (03) நபர்கள், கடலாமை இறைச்சி, முட்டை, டிங்கி படகு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை இளங்கத்துரையில் வசிக்கின்ற 36, 44 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திருகோணமலையில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டன.