சதொச களஞ்சியசாலைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க கடற்படை உதவி


அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களிடையே விநியோகிக்க ஏற்பாடு செய்வதை குறித்து கடற்படை இன்று (2020 மார்ச் 25) உதவி வழங்கியது.

புதிய கொரோனா வைரஸ் காரணத்தினால் நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவுகளுக்கிடையில் கூட அத்தியாவசியப் பொருட்களை எந்தவொரு பற்றாக்குறையும் இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 25,) எண்டேரமுல்ல பகுதியில் உள்ள சதொச களஞ்சியசாலையில் அத்தியாவசிய பொருட்களை தயார் செய்ய தனது உதவியை வழங்கியது. இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் குறித்த இடத்திற்குச் சென்று நடந்து வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும் கடற்படைத் தளபதி பணியில் ஈடுபடும் கடற்படை வீரர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

மேலும், கடற்படை நாட்டின் மற்றும் அதன் மக்களின் நல்வாழ்வுக்காக உதவி வழங்க தயாராக உள்ளது.