யாழ்ப்பாணம் பகுதியில் கடற்படை பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸை பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 25) கடற்படை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொண்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ், கடற்படை பொது இடங்களில் பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று (2020 மார்ச் 25,) வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் அமைச்சகம், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் துறை மற்றும் யாழ்ப்பாண மார்பு சிகிச்சை ஆய்வகம் ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடற்படை துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு மாகாண சுகாதார அமைச்சக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கம் செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இங்கு அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் பொது மக்களின் பாதுகாப்புக்காக வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கடற்படை மேற்கொண்டு வருகிறது.