றாகம பகுதியில் பல இடங்கள் மையமாக கொண்டு கடற்படை கிருமி நீக்கம் திட்டங்கள் மேற்கொண்டது.

புதிய கொரோனா வைரஸை நாட்டில் பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 26) கடற்படை றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மற்றும் றாகம பொல்கஹஹேன இயேசு குழந்தை பாடசாலை ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொண்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ், கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவு மூலம் பொது இடங்களில் பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று (2020 மார்ச் 26) றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மற்றும் றாகம பொல்கஹஹேன இயேசு குழந்தை பாடசாலை ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் பல பகுதிகளில் வைரஸ் பரவும் அபாயத்தைத் தடுக்க, முறையான நடைமுறைகள் படி மேற்கொள்ளப்பட்டது.

றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடற்படை கிருமி நீக்கம் செய்வது இது இரண்டாவது முறையாகும், மேலும் பொது இடங்களில் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.