கடற்படை வடக்கில் தீவுவாசி மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 26,) யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளில் வாழும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஆதரவளித்து வருகிறது. அதன்படி, யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் வாழும் ஏழை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்று இன்று (2020 மார்ச் 26) கடற்படை துணைப் பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கிழ் 698 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உலர் பொதிகள் நய்னாதீவு மற்றும் எலுவதீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் ஏழை மக்களிடையில் விநியோகிக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்காக துறைத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட மாலுமிகள் கலந்து கொண்டனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சமூக நலனில் பங்களிப்பு செய்ய கடற்படை தயாராக உள்ளது.