வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு கடற்படை இரத்த தான திட்டங்கள் மேற்கொண்டுள்ளது

வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான திட்டங்கள் இன்று (2020 மார்ச் 27) அந்தந்த கட்டளைகளுடன் இணைக்கப்பட்ட கடற்படை பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

புதிய கொரோனா வைரஸின் விளைவுகளின் விளைவாக, நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்ட இரத்த இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் இரத்த பற்றாக்குறையை சமாளிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ், கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீராவின் வழிகாட்டுதலின் கிழ் வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு ஒரு இரத்த தான திட்டம் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்திலும், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேராவின் வழிகாட்டுதலின் கிழ் கிழக்கு கடற்படை கட்டளைமையமாக கொண்டு ஒரு இரத்த தான திட்டம் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அறிவியல் பீடத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்-தெலிப்பலை கிராம வைத்தியசாலை, முல்லைதிவு பொது வைத்தியசாலை மற்றும் திருகோணமலை அடிப்படை வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் கடற்படை மருத்துவ ஊழியர்கள் பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கினர். மேலும், தேசிய நலன்களை உணர்ந்த எதிர்கால நிகழ்வுகளில் கடற்படை தனது பங்களிப்பை வழங்க கடற்படை தயாராக உள்ளது.