சமூக சேவையின் ஒரு பகுதியாக குடிநீர் மற்றும் உலர் உணவை விநியோகிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மத இடங்களுக்கு மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 மார்ச் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை மூலம் மெற்கொள்ளப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட பேரழிவு நிலைமை மத்தியில் பொதுமக்களின் வாழ்க்கையைத் தக்கவைக்க அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் லலித் திசானநாயக்கின் மேற்பார்வையில் இந்த மகத்தான செயல் 2020 மார்ச் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக கடற்படையின் நகரும் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

மேலும், கடற்படையால் மேற்கொள்கின்ற சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஏழைக் குடும்பங்களின் அன்றாட வழக்கத்தை பராமரிக்க உதவுகிறது.