கடற்படை இரண்டாவது முறையாக றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது

புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்க இன்று (2020 மார்ச் 28) றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று கடற்படை மூலம் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ், மேற்கு கடற்படை கட்டளையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவு மூலம் இரண்டாவது முறையாக வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் வைத்தியசாலையில் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் முறையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் ஆபத்தான மண்டலமாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இங்கு வைத்தியசாலையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் முறையாக கிருமி நீக்கம் திட்டம் செய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.