கொரோனா பரவுவதைத் தடுக்க DSI நிறுவனம் கடற்படைக்கு சுகாதார உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவாக DSI நிறுவனம் கடற்படைக்கு பல சுகாதார உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் கீழ் கடற்படை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த திட்டங்களுக்காக நிதி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்குவதன் மூலம் மாநில மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதரிக்கின்றன. அதன்படி, DSI நிறுவனம் 2020 மார்ச் 25 அன்று 250 பாதுகாப்பு காலணிகள் மற்றும் அறுவைசிகிச்சை காலணிகளை கடற்படைக்கு வழங்கியது. இந்த நன்கொடைகளை தெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் பெற்றார்.

இந்த நிகழ்வுக்காக DSI நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டதுடன் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொள்கின்ற முயற்சிகளை நன்கொடையாளர்கள் மிகவும் பாராட்டினர். தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி கடற்படை சார்பாக இந்த மகத்தான பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.