இலங்கை கடற்படை மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவவில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியுள்ளது.

புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 29 ஆம் திகதி மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவ பகுதிகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு (02) விடுமுறை விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நிறுவியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவ பகுதிகளில் உள்ள இரண்டு விடுமுறை விடுதிகள் தனிமைப்படுத்தலுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் செய்யப்பட்டன. மிஹிந்தலை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 100 பேருக்கும் ஒயாமடுவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 24 பேருக்கும் தேவையான வசதிகளும் உள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வருபவர்களுக்கு, கடற்படை மூலம் சுகாதாரம், இணையம், தொலைக்காட்சி மற்றும் பிற தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்படை பொது சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ், இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வருபவர்களுக்கு சத்தான உணவை வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.