ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூன்று பேர் (03) கடற்படையால் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூன்று பேரை (03) 2020 மார்ச் 29 அன்று ஆருகம்பை சாலைத் தடையில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டது.

நாட்டில் பேரழிவு நிலைமை கட்டுப்படுத்த மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீவு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய 03 பேரை தென்கிழக்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் பயணித்து வந்துள்ள போது ஆருகம்பை சாலைத் தடையில் கடமையில் இருந்த கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 24, 35 மற்றும் 39 வயதுடைய பொத்துவில் பகுதியில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிப்பது பொதுமக்களின் கடமை மற்றும் பொறுப்பாகும். இவ்வாரான பொறுப்பற்ற நடவடிக்கைகள் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்படுகிறது.