கடற்படையால் புத்தலம் சஹீரா கல்லூரியில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களின் மற்றொரு திட்டம் புத்தலம் சஹீரா கல்லூரி மையமாக கொண்டு இன்று (2020 மார்ச் 29) செயல்படுத்தப்பட்டது.

புதிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கூட்டு பொறிமுறையை ஆதரித்து, 2020 மார்ச் 30, அன்று, இலங்கை கடற்படை, புத்தலம் சஹீரா கல்லூரியில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று செயல்படுத்தியது. கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரகால பதிலளிப்பு பிரிவு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.

இங்கு பாடசாலையின் அனைத்து வளாகங்களும் நடைமுறைகளுக்கு ஏற்ப கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் வைரஸ் பரவாமல் தடுக்கும் செயல்பாடுகளில் அரசாங்கத்திற்கு உதவ கடற்படை அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.