அனலதீவு மக்களுக்கு கடற்படையால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை 2020 மார்ச் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அனலதீவில் வசிக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2020 மார்ச் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அனலதீவில் வசிக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று கடற்படை துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கிழ் 500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உலர் பொதிகள் தீவில் வசிக்கும் மக்களிடையில் விநியோகிக்கப்பட்டன.

மேலும், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ கடற்படை தொடர்ந்து இதேபோன்ற சமூக பொறுப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. .