ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பேசாலை காவல்துறையினர் இனைந்து 2020 மார்ச் 31 ஆம் திகதி மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் நிலவும் பேரழிவு நிலைமையை எதிர்கொண்டு அதை ஒழுங்குபடுத்துவதற்கான அனைத்து ஆதரவையும் வழங்குகின்ற கடற்படை நாட்டைப் பாதுகாப்பதில் தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன்படி, 2020 மார்ச் 31, அன்று, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் பேசாலை காவல்துறையினர் மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய ஒருவரை கண்டறிந்தனர் மேலும் அவரை சோதனை செய்த போது 810 மிகி போதைப்பொருள் அவரது வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசாலை காவல்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.