தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 மார்ச் 31 ஆம் திகதி கோகிலாய் ஜின்னபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையுடன் 02 நபர்களை கைது செய்தது.

இலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடலில் மீன்வளம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2020 மார்ச் 31, அன்று, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு கோகிலாய் ஜின்னபுரம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு மோட்டார் முச்சக்கர வண்டி (Motor Tricycle) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளைக் கவனித்துள்ளனர். அதன்படி, மோட்டார் முச்சக்கர வண்டி (Motor Tricycle) மேலும் சோதனை செய்த பொது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த வலை மோட்டார் சைக்கிளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 39 மற்றும் 45 வயதுடைய புல்மோட்டை பகுதியில் வசிப்பவர்கள். என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மோட்டார் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.